ஜெயங்கொண்டம் அருகே அதிக வெள்ளப்பெருக்கால் தரை பாலம் உடைந்ததால் அழகர்கோயில் டு மீன்சுருட்டி சாலை துண்டிப்பு போக்குவரத்து பாதிப்பு.

X
அரியலூர், டிச.13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆசியாவிலேயே மிக உயரமான யானை சிற்பம் அமைந்துள்ள அழகர் கோவிலில் இருந்து மீன்சுருட்டி செல்லும் சாலையில் அளவேரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து உபரி நீர் செல்வதற்கு சிமெண்ட் குழாயினால் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரியில் இருந்து அதிகப்படியாக சென்ற உபரி நீரால் சிமெண்ட் குழாய் மூலம் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டது இதனால் அழகர் கோவிலில் இருந்து மீன்சுருட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருடா வருடம் வரும் மழையினால் இவ்வகையான பைப் லைன் தரைப்பாலம் சேதம் அடைவதும் அதை மீண்டும் சீரமைப்பதுமாக உள்ளது எனவே சிமெண்ட் பைப்பினால் ஆன தரைப்பாலத்தை அகற்றிவிட்டு சிமெண்டினால் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

