ஜெயங்கொண்டம் அருகே மழை வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்

ஜெயங்கொண்டம் அருகே குச்சனூர் கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி 30க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்..
அரியலூர், டிச.13- ஜெயங்கொண்டம் பகுதியில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் அளவில் சம்பாநெல் பயிரிடப்பட்டு வரும் தை மாதத்தில் சாகுபடி செய்ய தயாராக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை நீரில் மூழ்கி உள்ளது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தண்டலை, பிச்சனூர், பிராஞ்சேரி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 30 ஏக்கர் அளவில் சம்பா நெல் பயிரிடப்பட்டு வரும் தை மாதம் சாகுபடி செய்ய இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையினால் மழைநீர் சேர்ந்து கடல் போல் காட்சி அளிக்கின்றனர் இதில் அறுவடை செய்ய இருந்த ஏழு அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் அளவில் செலவு செய்துள்ளோம் இந்த நிலையில் தற்போது தண்ணீர் வற்றாமல் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளன.க பிச்சனூரில் இரட்டைக் குழாய் மதுகு போல போட்டு உள்ளனர் அதில் சீராகவே தண்ணீர் வடிகால் ஆகி வருகிறது எனவே அதனை இடித்து அகற்றிவிட்டு பெரிய அளவிலான மது கை கட்ட வேண்டும் மேலும் அப்பகுதி வழியாக உள்ள நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி தூய்மை படுத்த வேண்டுமெனவும், வேளாண்மை அதிகாரிகள் நிலங்களை ஆய்வு செய்து அதற்குரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே போல் பிச்சனூர் பகுதி கடலை பயிர் விவசாயிகளும், சவுக்கு மரக்கன்று விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் விவசாயி தமிழரசன் கூறும்போது :- தாங்கள் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து 12 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நடவு நட்டு அதற்கு மருந்து உள்ளிட்டவைகள் தெளித்து தற்பொழுது மார்பளவு பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யும் பருவத்தில் சுமார் 12 லட்சம் நெல்கள் விற்பனைக்கு ஆகும்.மூன்று லட்சம் செலவு போக மீதி 6 லட்சம் கிடைக்கும் அத்தனையும் வீணாகி மழை நீரில் அழுகி நாசமாகியுள்ளது.இதற்குக் காரணம் சரியான மழை தண்ணீர் வடிகால் ஆகாதே காரணம் எனவே விவசாயத்தைத் தவிர வேறு எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது,வருமானமும் கிடையாது எனவே தமிழக அரசு பயிர்களை ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்கினால் மட்டுமே எங்களால் வாழ முடியும் என வேதனை தெரிவித்தார்.மேலும் அப்பகுதி விவசாயிகள் கூறும்போது :- வடிகால் பாலத்தை உயர்த்தி கட்டியும் நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
Next Story