பூந்தோட்டம் பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் விருத்தாச்சலம் - சிதம்பரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல்...

பூந்தோட்டம் பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் விருத்தாச்சலம் -  சிதம்பரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல்...
X
குளத்தை தூர்வார கோரிக்கை
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் விருத்தாச்சலம் - சிதம்பரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல்... கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வார பலமுறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது பெய்த கனமழையால் குளம் நிரம்பி மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாச்சலம் சிதம்பரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story