சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் களநிலவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வீராணம் மரி பகுதியில் 309.70 மி. மழை பொழிவு ஏற்பட்டுள்ளது கனமழை காரணமாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றுபெய்த கனமழையின் காரணமாக ஒருசில தாழ்வான இடங்களில் குறைந்தபட்ச அனவில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு கோமுகி மணிமுத்தாறு மற்றும் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து சுமார் 33,000 கனஅடி நீர் வருவதாலும் அணைக்கட்டில் உடைப்பு ஏற்படாவண்ணம் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் அதிகபட்ட நீர்இருப்பின்க்ஷ அளவு 47.5 அடி ஆகும். அதில் தற்போது 46.0 அடி இருப்பும். நீர்வரத்து வினாடிக்கு 22808 கனஅடியாகவும். நீர்வெளியேற்றம் வினாடிக்கு 18,008 கனஅடியாகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகஏரியின் நீர்மட்டம் குறைக்கப்பட்டு ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாகவும் கொள்ளளவு 978.20 மி.கனஅடியாக குறைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து நேற்று முதல் கால்பேட்டை கலுங்கு வழியாக வெளியேற்றப்படும் நீர் 500 கனஅடி முதல் படிப்படியாக 3000 களஅடியாக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள தெரிவிக்கப்பட்ட. எச்சரிக்கை அறிவிப்பு கரையோர பொதுமக்களுக்கு மேலும் தற்பொழுது அரியலூர் மாவட்டம். வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த கனமழை காரணமாக செங்கால்ஒடை வடிகால்கள் பாப்பாக்குடி வடிகாங்கள் மற்றும் ஆண்டிபாளையம் வடிகால்கள் ஆகியவை மூலம் விரானாம் ஏரிக்கு சுமார் 22.808 க.அ /வினடி வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை உடைப்பை தவிர்க்கும் பொருட்டு ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக 16.068 கனஅடி/விளாடி வெள்ள நீரும். VNSS வழியாக TA10 கனஅடி/வினாடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது வெள்ளியங்கால் ஓடைகரைகளில் உடைப்பு ஏதும் ஏற்படவில்லை. வீராணம் ஏரியின் எதிர்வாய்க்கரைகளில் உள்ள கிராமகனான சித்தமல்லி அறந்தாங்கி, அரைபுத்தூர் மற்றும் கருணாகரநல்லூர் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சுமார் 2.அடி உயரத்திற்கு தேங்கியுள்ளதாங் வி.என்.எஸ் மதரு மூலம் வெள்ளாற்றிலும் மற்றும் பால்பேட்டை மதகு மூலம் வெள்ளியங்கால் ஓடைக்கும் mont 18000 mன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கரை உடைப்பு ஏற்படாதவண்ணம் தொடர்கண்காணிப்பில் ஈடுபட துறை சார்ந்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருத்தாசலம். ாட்டுமன்ணர்கோயில், திட்டக்குடி பகுதிகளில் 5 இடங்களில் அமைபட்ட நிவாரண முகாம்களில் 110 வீடுகளை சேர்ந்த 382 நபர்களுக்கு காவை உணவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் வட்டம் கோவிந்தநல்லூர் ஊராட்சியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்களை மீட்கப்பட்டு ஆச்சி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்லவியிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள பாண்டியன் ஏரியிலிருந்து கண்ணாத்தான் ஓடை வழியாக வெள்ளநீரினை வெளியேற்றும் இடங்களில் பார்வையிட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை எவ்வித சுணக்கமுமின்றி மேற்கொண்டு பொதுமக்களை இயற்கை இடர்பாடுகளிலிடமிருந்து பாதுகாத்திட வேண்டுமென அலுவகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போது காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம சிந்தனைச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) காந்தரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story