விருத்தாசலம் அருகே ஏரிக்கரைகள் உடைந்து குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு

விருத்தாசலம் அருகே ஏரிக்கரைகள் உடைந்து குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு
X
750 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது விருத்தாசலம் பகுதியில் கனத்த மழை பெய்து வருவதால் மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருணாச்சலப் பிள்ளை ஏரி, சித்தேரி, உள்ளிட்ட ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இந்நிலையில், வடிகால் வாய்க்கால்கள் வழியாக உபரி நீர் முழுவதுமாக வெளியேறாததால் அருணாச்சல பிள்ளை ஏரியின் கரை திடீரென உடைந்து, காட்டாற்று வெள்ளம் போல் மாத்தூர் குடியிருப்பு பகுதி விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதே போல சித்தேரியின் கரையும் உடைந்ததால் ஏரி தண்ணீர் முழுவதும் வெளியேறி வருவதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கர் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் ஏரி தண்ணீர் குடியிருப்ப சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசித்து வந்த 47 குடும்பங்களை மீட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏரியின் கரை உடைந்து முழு தண்ணீரும் வெளியேறி வருவதால் உடனடியாக கரையை சீரமைத்து தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி உடைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாய விளைநிலங்களுக்கு தமிழக அரசு நிவாரண வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story