ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை பஸ் மீது லாரி மோதி விபத்து

X
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவலுார் குப்பம் பகுதியில் கார் மற்றும் பைக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனமான யுனோ மின்டா தொழிற்சாலையில் இருந்து, 9 உழியர்களுடன், தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து காஞ்சிபுரம் சென்றது. சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேவளூர் குப்பம் சந்திப்பில், யூ-டர்ன் எடுத்த போது, வேலுாரில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு, பின்னால் வந்த லாரி, கட்டுபாட்டை இழந்து தனியார் தொழிற்சாலை பேருந்து மீது மோதியது. இதில், பேருந்து கவிழ்ந்து, சாலையின் எதிர்திசையில், சென்னையில் இருந்து வேலுார் சென்ற ‛இநோவா' கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, வெளியில் விழுந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். விபத்து நடந்த போது, சாலையை கடக்க முயன்ற பீஹார் மாநிலத்தை சேர்ந்த குகன் சத்திரி, 17, லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்தன. மேலும், லாரி டிரைவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த சோட்டா லால், 28, தனியார் தொழிற்சாலை ஊழியர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார், 23, ஆகிய இருவருக்கும் தலை மற்றும் காலில் பலத்த காயமும், மற்ற ஊழியர்கள் 7 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அவர்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால் முறிவு ஏற்பட்ட குகன் சத்திரி செங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விபத்தில் சிக்கி வாகனங்களை கிரைன் வாயிலாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

