தொடர் மழையால் நிரம்பிய வாழைக்குளம் கண்மாய் மதகு திறந்து விடப்பட்டதால் ஆறாக ஒட்டிய நீர் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழையால் நிரம்பிய வாழைக்குளம் கண்மாய் மதகு திறந்து விடப்பட்டதால் ஆறாக ஒட்டிய நீர் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மலை காரணமாக மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. நீர்வரத்து அதிகமாக இருந்ததால் மதகு வழியாக நீர் வெளியேற்றப்பட்டதால் ஆபத்தை உணராமல் குளியல் போடும் பொதுமக்கள்.. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று காலை தொடங்கிய மழை காரணமாக தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பேயனாறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று காலையில் இருந்து வாழைக்குளம் கண்மாய் முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது. கடந்த நவம்பர் 2-ம் தேதி மாவட்டத்தில் முதல் கண்மாயாக வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக மறுகால் பாய்ந்தது. தொடர்ந்து கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து வந்ததை அடுத்து, நேற்று மாலை 5.30 மணி அளவில் கலிங்கல் மதகு திறக்கப்பட்டு அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஆண்கள்,பெண்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடித்தும் குளியல் போட்டும் இருசக்கர வாகனத்தை இயக்கியும் வருகின்றனர். பொதுமக்கள் குளிக்காதவாறும், வெளியேறும் நீர்களில் இறங்காதவாறும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

