திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகில் பசுமாடு ரயிலில் சிக்கி உயிரிழப்பு

திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகில் பசுமாடு ரயிலில் சிக்கி உயிரிழப்பு
X
திருப்பத்தூரில் ரயில் நிலையம் அருகில் பசு மாடு ரயிலில் சிக்கி உயிரிழப்பு 4 நாட்களாக நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தாமல் துர்நாற்றம் வீசும் அவல நிலை!
திரும்பத்தூர் மாவட்டம் தென்றல் நகர் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தால் மாட்டால் துர்நாற்றம் வீசும் அவலம்! ரயில்வே துறையினர் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தென்றல் நகர் பகுதியில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 4 நாட்களுக்கு முன்பு வழியாக கடந்து சென்ற மாடு ஒன்று ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த நாள் முதல் இன்று வரை அந்த மாட்டை அப்புறப்படுத்தாத காரணத்தால் அந்த மாடு அழுகி துர்நாற்றம் வீசி அக்கம் பக்கத்தினர் வசிக்கக் முடியாத சூழ்நிலையும் அதேபோல நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் அடைந்து வருகின்றனர் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகராட்சியனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஆனால் மாடு உயிரிழந்த உள்ள இடம் ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அதனை அப்புறப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளனர் இதன் காரணமாக ரயில்வே துறையினர் இந்த மாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….
Next Story