டி.என்.பாளையம் அருகே வீடு புகுந்து பெண் பலாத்கார முயற்சி வாலிபர் கைது

X
டி.என்.பாளையம் அருகே வீடு புகுந்து பெண் பலாத்கார முயற்சி வாலிபர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அருகே வசித்து வருபவர் 49 வயதுடைய பெண். திருமணமான இவர் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த சீனிவாசன் என்பவருடைய மகன் சந்தோஷ் (வயது 22) அங்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் ஆபாசமாக பேசி பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் சந்தோசிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றினர். இதுகுறித்து அந்த பெண் பங்களாப்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்
Next Story

