குமரி : மருத்துவ கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் சென்னையில் உயிரிழப்பு

X
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இலந்தை வேந்தன் என்பவர் மகள் சாருமதி இறுதி ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் உள்ள தனது அறையில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கோமா நிலைக்கு சென்ற சாருமதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாருமதி நேற்று (13-ம் தேதி) மதியம் உயிரிழந்தார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்னை சென்று அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் சாருமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

