குன்னூர் மேற்கு வங்கத்திலிருந்து முறையற்ற வகையில் தேயிலை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை குன்னூர் தேயிலை வாரிய அதிகாரிகள் துரத்தி பிடித்து தேயிலை கழிவுகளை அழித்தனர்........
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேற்கு வங்கத்திலிருந்து முறையற்ற வகையில் தேயிலை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை குன்னூர் தேயிலை வாரிய அதிகாரிகள் துரத்தி பிடித்து தேயிலை கழிவுகளை அழித்தனர்........ இந்திய தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் 12ஆம் தேதி கோவை மாவட்டம் பகுதியில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ய நிறுத்திய பொழுது லாரி நிற்காமல் சென்றுள்ளது அதனை துரத்தி சென்று கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் மடக்கி பிடித்து பார்த்த பொழுது மேற்கு வங்கத்திலிருந்து முறையற்ற வகையில் 13 ஆயிரத்து 600 கிலோ தேயிலை கழிவுகள் உள்ளதை கண்டுபிடித்தனர் அதன் மதிப்பு 10 லட்சம் என்று கூறப்படுகிறது உடனடியாக கழிவுகளை பறிமுதல் செய்தனர் பின்பு இந்த கழிவு யாருக்கு செல்கிறது என்று வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை செய்து அந்த உரிமையாளரின் நிலத்திலேயே ஜேசிபி மூலம் குழி தோண்டி புதைத்தனர் மேலும் இதுபோல் உள்ள தேயிலை கழிவுகளை லாரியில் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை அதிகாரிகள் எச்சரித்தனர் மேலும் இது போல் வட மாநிலங்களில் இருந்து கழிவுகள் வாங்குபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தெரிவித்தார்.
Next Story




