தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில மைய தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில மைய தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில மைய தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில மைய தேர்தலில் விறுவிறுப்பாக வாக்களித்த கிராம நிர்வாக அலுவலர்கள். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில மைய தேர்தல் கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் 2024-ம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் ராஜ்கமல் , மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் தனராஜ், மாவட்ட இணை செயலாளர் தனபால், வட்ட தலைவர் ஆனந்த், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மையத் தேர்தலில் மாநில தலைவர், மாநில பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் மாநிலத் துணைத் தலைவர், மாநில செயலாளர் இரண்டு.உள்ளிட்ட ஐந்து பதவிகளுக்கு15 பேர் போட்டியிட்டுள்ளனர். மேலும், மொத்த வாக்காளர்கள் 54 பேர். இதில் ஆண்கள் 37, பெண்கள் 17பேர் உள்ளனர் தேர்தல் மேற்பார்வையாளராக ராஜகுரு, முகமது ஷாபீர் பணியாற்றினர். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்க கட்டடத்தில் காலை 10 மணியிலிருந்து வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
Next Story