சைக்கிள் சென்ற பெண்ணிடம் செல்போன் பணம் பறிப்பு

X
விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பழையப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் மனைவி வண்ணமலர் (வயது 37). இவர் பால் ஊற்றுவதற்காக சைக்கிளில் ப.எடக்குப்பம் கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பால் சென்டரில் பால் ஊற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீராரெட்டிக்குப்பம் கோட்டேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் வண்ணமலரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 500 பணத்தை பிடுங்கிக் கொண்டு அவரை மிரட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வழிபறியில் ஈடுபட்டவர் வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் மகன் ஜான் போஸ்கோ (24), என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் ஜான் போஸ்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

