ஊழல் செய்யும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

ஊழல் செய்யும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
X
கடலூரில் எம் எல் ஏ வேல்முருகன் பேட்டி
ஓட்டு கேட்கும் போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தேர்தல்‌ முடிந்தவுடன் PROTOCOL என ஒதுக்கப் படுகின்றனர் இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர் வினையாற்றுவார்கள் என த வா க தலைவர் வேல்முருகன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் தெரிவிக்கையில் எப்போதெல்லாம் தமிழகத்தில் பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பாதிக்கப்படும் இடம் கடலூர். சாத்தனூர் அணை திறப்பினால் எனது தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது குறிப்பாக என்னுடைய தொகுதி இரண்டு பக்கமும் ஆறுகள் கொண்ட ஒரு சட்டமன்றத் தொகுதி ஒரு பக்கம் தென்பெண்ணையாறு நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளடக்கிய கரையோர கிராமங்கள் இன்னொரு பக்கம் பண்ருட்டி கெடிலமாறு நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ளடக்கிய ஆறு இந்த இரண்டு ஆறுகளிலும் மிகப்பெரிய வரலாறு காணாத அளவுக்கு ஆறில் தண்ணீர் வழிந்து ஓடி வந்தது இதனுடைய விளைவு மிகப்பெரிய துயரத்தை எம் மக்கள் அடைந்தனர்.ஆனால் குடும்ப அட்டைக்கு வெறும் 2 ஆயிரம் தமிழக முதல்வர் அறிவித்தார்.அதுவும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவில்லை.கடந்த 2001 ம் ஆண்டு முதல் பேரிடரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் மக்களிடமும் ஆறுதல் தான் தெரிவிக்க முடிகிறது.நான் கோரிக்கை தான் வைக்க முடியும். ஆனால் அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.துணை முதல்வர் வரும் போது பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள். வைத்தேன்.ஆனால் அவர் வந்து பார்வை யிடவில்லை அவர் வருகின்ற தகவலையும் முறையாக எனக்கு தெரிவிக்கப்படவில்லை.தனிப்பட்ட எம்எல்ஏவாக எவ்வளவு லட்ச மக்களுக்கு சொந்த செலவில் உதவ முடியும் ஏன் என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2ஆயிரம் நிவாரணம் வழங்கி பிச்சையா போடுகின்றனர் . கடலூர் மாவட்டம் என்ன பாவம் செய்தது வட தமிழ்நாடு என்ன பாவம் செய்துள்ளது என பேசினார்.அரசின் நிர்வாகத்திறன்மின்மையால் மக்கள் உயிர் பலியாகினர். இந்த மழை வெள்ளத்தால் அமைச்சரின் சொன்ன கணக்குப்படி 18 உயிர்கள் பறிபோய் உள்ளன அதில் என் பகுதியில் இரண்டு உயிர்கள். இயற்கை பேரிடர் ஏற்பட்ட பிறகு எத்தனை உயிர் இந்த தமிழகத்தில் போய் உள்ளது விவரங்கள் இல்லை எத்தனை கால்நடைகள் உயிரிழப்பு விவரங்கள் இல்லை விவசாய பயிர் வகைகள் எத்தனை ஆயிரம் ஹெக்டேர் பற்றிய விவரம் வெளிவரவில்லை இவர்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை . எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவரங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் மது குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் அரசு வழங்குகின்றது என்றார்.ஆட்சி முடிந்தால் மக்களை சந்திக்க வந்து தான் ஆக வேண்டும்.தேர்தலின்போது முதல்வருடன் அமர வைப்பவர்கள் தேர்தல் முடிந்தவுடன் PROTOCOL( வரிசைப்படி) வந்துவிடுகின்றது என்றும் இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர் வினையாற்றுவார்கள் என்று வேல்முருகன் ஆவேசமாக தெரிவித்தார்.அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதல்வருக்கு தெரிகின்றதா?இல்லையா? ஐஏஎஸ் ஐபிஎஸ் என தவறு யார் செய்தாலும் தவறு தான் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார். கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும்‌ வேல்முருகன் வலியுறுத்தினார். செய்தியாளர் சந்திப்பில் கடலூர் மாமன்ற உறுப்பினர் தி. கண்ணன், மாநில நிர்வாகி ஆனந்த், மாமன்ற உறுப்பினர் அருள் பாபு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லெனின் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story