விருத்தாசலம் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

X
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் விருத்தாசலம் வட்ட சட்டப்பணிகள் குழு, சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ் முன்னிலையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சௌபார்னிகா, இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஒன்று அரவிந்தன் ஆகியோர் மூன்று அமர்வுகளாக அமர்ந்து மோட்டார் வாகன விபத்து காப்பீடு வழக்குகள் , சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், இந்து திருமண சட்ட வழக்கு, குடும்ப வன்முறை வழக்கு, வங்கி வாரா கடன் வழக்குகள், குற்றவியல் அபராத வழக்குகள் என 226 வழக்குகளுக்கு, 4 கோடியே 33 லட்சத்து ஆயிரத்து 023 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்தராமன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story

