விருத்தாசலத்தில் மணிமுத்தாற்றின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

விருத்தாசலத்தில் மணிமுத்தாற்றின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
X
27 குடும்பங்கள் நிவாரண முகாமில் தங்க வைப்பு
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு, மணிமுத்தாற்றங்கரையில் சுமார் 19 குடும்பங்கள் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் குடியிருந்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மணிமுத்தாற்றின் கரையின் ஓரம் இருப்பதால் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக கோமுகி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரானது மணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் ஆற்றங்கரையோரம் உள்ள இந்த 19 வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து வந்ததுடன் இன்று காலை சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த மின்வாரியத் துறையினர் அந்த வீடுகளில் உள்ள மின்சாரங்களைத் துண்டித்து அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு வீடாக இடிந்து வரும் நிலையில் ஆற்றில் தண்ணீர் வற்றும் வரையிலும், பொதுமக்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் அங்குள்ள 10 வீடுகளுக்கு மட்டும் மாற்று இடம் வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர் ஆனால் 19 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை வீடுகள் இடிந்து பெரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துணை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்தும் மாற்று வழங்க வேண்டும் நிரந்தரமாகமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story