கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சிக்கிய பால்வியாபாரி மீட்பு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சிக்கிய பால்வியாபாரி மீட்பு
X
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சிக்கிய பால்வியாபாரி மீட்பு
மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (55). இவர், 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் சுரேஷ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 5 பேர், 100க்கும் மேற்பட்ட மாடுகளை கொசஸ்தலை ஆற்றில் மேய்சலுக்கு விட்டிருந்தனர். இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து நேற்று 16,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால், மணலி புது நகர், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை பார்த்து மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து கரைக்கு ஓடி வந்தனர். ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளும் கரை வந்து சேர்ந்தது. ஆனால் சுரேஷ், கரையை நோக்கி வருவதற்குள் உபரிநீர் அவரை சூழ்ந்தது. இதனால் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் ஏறி நின்று கொண்டு கொண்டார். தகவலறிந்த மணலி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் பாஸ்கர், மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் அங்கு வந்து, ரப்பர் படகு மூலம் சென்று, சுரேஷை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, பூண்டி ஏரி உபரி நீர் திறப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.
Next Story