பஞ்சு மில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து

பஞ்சு மில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து
X
பஞ்சு மில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து
அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் தனியார் பஞ்சு மில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து; பேருந்தில் பயணம் செய்த 10 பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தனியார் பஞ்சு மில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை சிப்டு முடிந்தவுடன் பெண் பணியாளர்கள் 15 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் பஞ்சு மில் பேருந்து நக்கலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை பாண்டி என்பவர் ஒட்டி சென்றார். அப்போது விருதுநகர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பெண் அச்சத்தில் பணியாளர்கள் கூச்சலிட்டனர். வழியாக சென்ற மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் பேருந்தில் இருந்த பணியாளர்களை மீட்டனர். இந்த விபத்தில் மில் பேருந்தில் பயணம் செய்த 10 பெண் பணியாளர்கள் வீக்கக் காயம் போன்ற லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் சம்பவ படத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story