புளியங்குடி துணிக்கடையில் புகுந்த பாம்பு பிடிபட்டது

புளியங்குடி துணிக்கடையில் புகுந்த பாம்பு பிடிபட்டது
X
துணிக்கடையில் புகுந்த பாம்பு பிடிபட்டது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி சுள்ளக்கரை அம்மா உணவகம் எதிரில் துணிக் கடை வைத்து இருப்பவர் பழனி மகன் ராகுல் குமார் (வயது 22). புளியங்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக கன மழை பெய்ததால் புளியங்குடி நாராயண பேரி குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இன்று காலை ராகுல் குமார் தனது கடையை திறக்கும் போது சுமார் 4 அடி நீளம் இல்ல பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடையில் இருந்து பதறிக்கொண்டு வெளியேறினார் உடனடியாக இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தகவல் அறிந்த தீனுக்கு துறை நிலைய அலுவலர் கருப்பசாமி உத்தாவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சிவகுமார் ராஜா, மாதவன், முருகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று துணி கடையில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக மீட்டனர். இதையடுத்து பாம்பு, வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story