கரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு, பொதுமக்கள் அவதி

X
நீலமங்கலம் - ஈசூர் இடையிலான தரைப்பாலம் மூழ்கியதால் நான்கு நாள் போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் கடும் அவதி செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள நீலமங்கலம் - ஈசூர் இடையே தரைப்பாலமானது உள்ளது. இந்த தரை பாலா ஆனது கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மதுராந்தகம் ஏரியிலிருந்து சுமார் 7000 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் நீலமங்கலம் - ஈசூர் இடையே உள்ள தரைபாலமானது முற்றிலும் முழுகி உள்ளது. இதனால் நீலமங்கலம், சாத்தமங்கலம்,பேக்கரணை, சீர்வாடி, புண்ணம்மை,நெல்வாய், தச்சூர், குன்றத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தற்பொழுது இந்த பாலத்தின் வழியாக செல்ல முடியாத ஒரு சூழலானது உருவாக்கியுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக இந்த தரைபாலும் மூழ்கியுள்ளதால் இக் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் செல்வதற்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழலானது ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த தரைபாலத்தில் அதிகளவு தண்ணீர் செல்வதால் ஒரு மாத காலத்திற்கு மேலாக இப்பகுதியில் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இக்கிராமத்திற்கு இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும் என சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இதனால் வரைக்கும் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story

