தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்.

X
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க, மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஆரணியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, செய்யார், திருவண்ணாமலை ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களிலும் சனிக்கிழமை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 3 கோட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 538 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சனிக்கிழமை வாக்களித்தனர். ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட தலைவர் ஏ.ரமேஷ், மாவட்ட செயலாளர் ஏ.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் எஸ்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். தற்போதைய மாநில பொதுச்செயலாளர் என்.சுரேஷ், செய்யார் கோட்டத்தில் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தார்.
Next Story

