கரூரில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூரில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூரில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத்துக்கு 28 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் மின்னாம்பள்ளி கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்த ஊராட்சி மன்ற திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில் காலை உணவாக பரிமாறப்பட்ட சர்க்கரைப் பொங்கல், இட்லி, வெண்பொங்கல் ஆகியவற்றை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் அதிகாரிகள், மக்களோடு மக்களாக நின்று கொண்டு சாப்பிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கருணாநிதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story