கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
Karur King 24x7 |15 Dec 2024 10:54 AM GMT
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளது. 48 வார்டுகளிலும் உள்ள பொது மக்களின் பொதுவான அடிப்படை வசதிகள் குறித்த குறைகள் குறித்த புகார்களை பெரும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது கட்டமாக நடைபெற்றது. இன்று கரூர் மாநகராட்சியில் 8, 19, 18, 17, 12,11, 20,21,35,34, 35, 32 ஆகிய வார்டு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சார மற்றும் ஆகிய தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று க் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சுதா, மண்டல தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்தந்த வார்டு பகுதியில் நடைபெற்ற இந்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தார்.
Next Story