வடகரை ஆத்தூர் ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் லிங்கம் பிரதிஷ்டை விழா.

X
Paramathi Velur King 24x7 |15 Dec 2024 6:45 PM ISTவடகரை ஆத்தூர் ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் லிங்கம் பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது.
பரமத்தி வேலூர், டிச.15: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரை ஆத்தூர் இந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் யோக திருக்கோவில் சித்தர் பீட சிவலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 14 ஆம் தேதி காலை முதற்கால யாக பூஜையும், மாலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. 15 ஆம் தேதி காலை சிறப்பு யாகம் செய்யப்பட்டு ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் சித்தர் பீட லிங்கத்திற்கு குடமுழுக்கு நன்நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story
