ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது

ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது
X
ராமநாதபுரம் செஸ் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து 25 வது மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளை இராமநாதபுரம் தேவிபட்டிணம் அருகே செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக் ஆகியோர் தலைமையில் பல பிரிவுகளாக வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது, இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் அனைவரயும் வரவேற்றார். இதனை அடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது, சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஹாக்கி வீரர் சார்பு ஆய்வாளர் சரவணகுமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளை வழங்கினார் இதில் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், செஸ் அசோசியேசன் துணைத் தலைவர் தேவி உலகராஜ் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ஒய் ஆர் சி ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், உடற்கல்வி இயக்குனர் சவேரியார், இன்டர்நேஷனல் ஆர்பிட்டர் அதுலன், செஸ் அசோசியேசன் பொருளாளர் குணசேகரன், துணைச்செயலாளர் ராஜன், செஸ் அசோசியேசன் பயிற்சியாளர் சாலமன் ரத்தினசேகரன், பயிற்சியாளர் திரவிய சிங்கம், துணை செயலாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story