புதுப்பாளையம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்று விடும் திருவிழா.
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றது. ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆரணி எம்.பி, எம்.எஸ். தரணிவேந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கவேலு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கே. நந்தினிகண்ணன் அனைவரையும் வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.மோகன், ஒன்றிய கவுன்சிலர் கீதா மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர்கள் துரைமாமது, சுந்தர், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டது. வெற்றி பெற்ற கன்றுகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 30,000, இரண்டாம் பரிசு ரூபாய் 25000, மூன்றாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம், ஆறுதல் பரிசாக 71 பேருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.
Next Story



