அதிஷ்டானத்தில் ஆராதனை விழா

X
திருக்கோவிலுார், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 51 வது ஆராதனை விழாவில் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஆராதனை விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், பாத பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று விசேஷ பாத பூஜை, மணிமண்டபம் சத்குரு நாதர் சன்னதியில் மகாதீபாராதனை, அதிர்ஷ்டத்தில் 108 கலச அபிஷேகம், 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.மாலை வினய்சந்திர மேனன் பாகவதர் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் முக்கியக ஆராதனை தினமான இன்று காலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Next Story

