அரவக்குறிச்சி உச்சத்திற்கு சென்ற முருங்கை விலை- மிச்சமின்றி விவசாயிகள் கவலை.

அரவக்குறிச்சி உச்சத்திற்கு சென்ற முருங்கை விலை- மிச்சமின்றி விவசாயிகள் கவலை.
அரவக்குறிச்சி உச்சத்திற்கு சென்ற முருங்கை விலை- மிச்சமின்றி விவசாயிகள் கவலை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியான க.பரமத்தி, ஈசநத்தம், மலைக்கோவிலூர், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கர் அளவில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. முருங்கைக்காய், முருங்கை கீரை மருத்துவ குணம் உடையதால் ஆண்டு முழுவதும் பொதுமக்கள் நுகர்வு அதிகம் உள்ளது. பொதுவாக முருங்கைக்காய் கிலோ 30 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை அதிகபட்சமாக விற்பனையாகி வந்தது. தற்போது தொடர்ந்து பெய்து வந்த அடைமழை காரணமாக முருங்கை மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்ததால் தற்போது முருங்கை காய் பிடிப்பு எதுவும் இல்லாமல் உள்ளது. உற்பத்தி முற்றிலுமாக நின்று போன நிலையில் தற்போது முருங்கைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 200 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை கடந்த 20 நாட்களாக விற்பனையாகி வருகிறது. இந்த நேரத்தில் முருங்கை தோட்டத்தில் முருங்கை காய்கள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். அதிகப்படியாக விளைந்த காலத்தில் விலை இல்லாமல் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், தற்போது அதிக விலை கிடைத்தும் முருங்கை காய்கள் கிடைக்காமல் மீண்டும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர் விவசாயிகள். முருங்கை காய்க்கு நிரந்தரமான விலை கிடைப்பதற்காக அரசின் சார்பில் முருங்கை பவுடர் தயாரிக்கும் திட்டம் தொடர்ந்து திட்டமாகவே உள்ளது. அது செயலாக்கத்திற்கு வரும்போது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
Next Story