மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியவர் மூழ்கினார்

X
திருக்கோவிலுார் அருகே ஆற்றில் மீன்பிடிக்க இறங்கியபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் ஊராட்சிக்குட்பட்ட, பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ், 38; நேற்று மாலை 3:00 மணியளவில் அணைக்கட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் மீன்பிடிக்க இறங்கினார். அப்போது சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

