குடியிருப்பு பகுதியில் உலாவிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் மக்கள் அச்சமடைந்தனர்
கோத்தகிரி அருகே கூக்கல் தொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலாவிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் மக்கள் அச்சமடைந்தனர்....... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கரடி சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக உணவு குடிநீர் தேடி உலா வரும் கரடிகள் சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன இந்த நிலையில் கூக்கல் தொரை கிராமத்தில் கரடி ஒன்று உலாவியதால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர் கரடி சுற்றித்திரிந்ததால் ஞாயிறு விடுமுறையால் குழந்தைகளும் வெளியே சென்று விளையாட அச்சமடைந்தனர் எனவே உடனடியாக வனத்துறையினர் கரடி கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வன பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Next Story




