கோபியில் கடைகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

X
கோபியில் கடைகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கச்சேரி மேடு பகுதியில் கோர்ட்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப் படும். இதன் காரணமாக இந்த பகுதியில் பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டீக்கடைகள், பழக்கடைகள் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 குரங்குகள் இந்தப் பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்து தின்று வருகின்றன. விரட்ட சென்றால் கடைக்காரர்களை கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் தினமும் குரங்குகளின் அட்டகாசத்தால் கடைக்காரர்கள் அச்சமடைந்துள்ளனர். பல இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

