மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

X
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் துவங்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.33 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 50 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் ஆகிய துறைகளுடன் இணைந்து செயலாற்ற உள்ளது. எனவே தங்கள் ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திட குழுவினர் வரும்போது அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் தெரிவித்தார். மேலும் முகாமில் 7 மாத பெண் கன்றுக்கு காதுவில்லை பொருத்தப்பட்டு கோமாரிநோய் தடுப்பூசியும், ஏற்கனவே காதுவில்லை பொருத்தப்பட்ட 2 வயதுடைய மாட்டிற்கு கோமாரி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இம்முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஷ்வரி, மருத்துவக் குழுவில் கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வகுத்தாலிங்கம், மரிய அன்றோ டேனி மற்றும் அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story

