ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் பகுதியையைச் சேர்ந்த பொதுமக்கள் ...*

ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள்  கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் பகுதியையைச் சேர்ந்த பொதுமக்கள் ...*
X
ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் பகுதியையைச் சேர்ந்த பொதுமக்கள் ...*
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் பகுதியையைச் சேர்ந்த பொதுமக்கள் ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் என்றும், எங்கள் கிராமத்தில் பல வருடங்களாக இடுகாடு வசதி, கழிப்பறை வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை என்றும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அங்கிருந்த காவல் துறையினர் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்
Next Story