எரக்குடி கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

X
அரியலூர், டிச.16- அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயண்சுத்தமல்லி ஊராட்சி, எரக்குடி கிராமத்தில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள் ,மாவட்ட ஆட்சித்தலைவர்,சட்டமன்ற உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கலான, நான் முதல்வன்,இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம்,தமிழ்ப்புதல்வன் ,கலைஞர் கனவு இல்லம்,விடியல் பயணம்,குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.
Next Story

