காங்கேயத்தில் சீராக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு வக்கீல் வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பெண்களுக்கு மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். சீரான குடிநீர் வழங்க கோரி காங்கேயம் தாராபுரம் சாலையில் களிமேடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story



