பரமத்தி வேலூரில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு.

X
Paramathi Velur King 24x7 |16 Dec 2024 8:52 PM ISTபரமத்தி வேலூரில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் சரவணன் ஆய்வு செய்தார்.
பரமத்தி வேலுார், டிச.15: பரமத்தி வேலுாரில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக வேலுார் அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன் வாகனங்களை நிறுத்தக்கூடாது என பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி தற்போது தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலுார் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை மோட்டார் வாகன விதிமுறைப்படி செயல்படுகிறதா என பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் மற்றும் வேலுார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அர்ஜுன்குமார் தலைமையில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது போக்குவரத்துக்கு இடையூறாக வேலுார் அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி மேற்கொண்டு போக்குவரத்து இடையூறாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Next Story
