உடுமலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு முதுகெலும்பு தண்டுவடம் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் (TNSDA) சார்பில் தமிழ்நாடு முதுகு தண்டுவட மாற்றுத்திறனாளிகள் சங்கம் தலைவர் டாக்டர் லலித்குமார் நடராஜன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு அங்கீகாரம் பெற்ற முதுகெலும்பு மறுவாழ்வு மையம், ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வுக்கான லவ் அண்ட் அக்ஸ்ப்ட்னஸ் நிறுவனம் (LAIRR) உறுப்பினர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகள் ஏந்தியபடி நிகழ்வில் பங்கேற்றனர்.. மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் பொறுப்பான சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு மேற்கொண்டு வரும் புகழ்பெற்ற அவர்னஸ் அப்பா என்பவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைவர் டாக்டர் லலித்குமார் நடராஜன் பேசுகையில், "சாலை பாதுகாப்பு என்பது ஒரு விதி மட்டுமல்ல, நமக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய பொறுப்பு. ஒன்றாக, நாம் பாதுகாப்பான சாலைகள் மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம். நமது சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதிலும் ஒவ்வொரு தனிநபரும் வகிக்கும் முக்கிய பங்கை நினைவூட்டுவதாக இந்த பேரணி செயல்படுகிறது. என்று தெரிவித்தார் நிகழ்வில் உடுமலை காவல் உதவிஆய்வாளர் ராஜ்குமார் , மற்றும் சமூக சேவகர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story

