திண்டிவணத்தில் ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மூடல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டிவணத்தில் ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மூடல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மூடல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க நிர்வாகிகள் கிருபாகரன், சேகர், தயாளன் தலைமை தாங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜானகிராமன், அரசாங்கு, அரிபிரசாத், சுரேஷ், தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் மூடப்பட்ட ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தை மீண்டும் திறக்கக் கோரி பேசினர். தொடர்ந்து கோரிக்கை மனுவை தலைமை போஸ் மாஸ்டர் ஹேமசித்ராவிடம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
Next Story