நேந்திரன் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி

X
நேந்திரன் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் நேந்திரன் ரகம் மற்றும் கதளி, ஜி-9 ரகம் பயிரிடப் பட்டுள்ளது. அதிக அளவில் கேரளா, மும்பைக்கு வாழைத்தார் இங்கிருந்து செல்கிறது. நேந்திரன் வாழை, கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது நேந்திரன் வாழை அறுவடை நடந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ, 30 முதல் 35 ரூபாய்க்கு விற்ற நிலையில், 50 ரூபாய்க்கு விற்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நேந்திரன் வாழைத்தார்களை வியாபாரிகளே நேரடியாக தோட்டத் துக்கு வந்து வெட்டி செல்கின்றனர். ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விலை போவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு கூறினர்
Next Story

