வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு

வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
X
திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், இளம் பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (25). டாஸ்மாக் ஊழியா். இவரது மனைவி மீனா. இந்த நிலையில், தனது மகளுடன் மீனா வீட்டுக்குள் இருந்தாா். அப்போது 2 இளைஞா்கள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த பொருள்களை திருட முயன்றனா். இதனால் அதிா்ச்சி அடைந்த மீனா சப்தமிட்டாா். இதையடுத்து, மா்ம நபா்கள் இருவரும் மீனா அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story