கோபி அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு

X
கோபி அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள மொடச்சூரில் நகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாக நிர்மலா தேவி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பள்ளிக்கூடத்துக்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட் களை திருடி சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடியவர் களை வலைவீசி தேடிவரு கின்றனர்.
Next Story

