பவானிசாகர் அணை பூங்காவில் தியாகி ஈஸ்வரன் உருவச்சிலை அமைப்பு

பவானிசாகர் அணை பூங்காவில் தியாகி ஈஸ்வரன் உருவச்சிலை அமைப்பு
X
பவானிசாகர் அணை பூங்காவில் தியாகி ஈஸ்வரன் உருவச்சிலை அமைப்பு
பவானிசாகர் அணை பூங்காவில் தியாகி ஈஸ்வரன் உருவச்சிலை அமைப்பு பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்தவர் சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.ஏ.ஈஸ்வரன் ஆவார். இவருக்கு உருவச்சிலை மற்றும் மணி மண்டபம் கட்ட வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தியாகி ஈஸ்வரனுக்கு பவானி சாகரில் உருவச்சிலை மற்றும் அரங்கம் கட்டப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு சட்ட மன்றத்தில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் தியாகி ஈஸ்வரனுக்கு வெண்கல உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் கட்டும் பணிக்காக ரூ.3 கோடியே 4 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 28-6-2023 அன்று கட்டுமான பணி தொடங்கியது. தற்போது அரங்கம் கட்டுமான பணி நிறைவு பெற்றுவிட்டது. மேலும் பவானிசாகர் அணைனுக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது. வருகிற 19 மற்றும் 20-ந் தொடங்கி வைப்பதற்காக வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனுக்கு அமைக்கப்பட்ட மணிமண்டபம் மற்றும் பூங்கா வளாகத்தில் - அமைக்கப்பட்ட உருவச்சிலையை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Next Story