ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தர கோரி மனைவி புகார்

ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தர கோரி மனைவி புகார்
X
ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அரியலூர், டிச.18- ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த கொளஞ்சி யின் மகன் சக்திவேலுவுக்கும்(33). சரண்யாவுக்கும்(21) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றநிலையில் சரண்யாவின் கணவர் சக்திவேல் கடந்த 6-ந் தேதி சென்ட்ரிங் வேலை செய்வதற்கு வெளியூர் செல்வதாக கூறிச் சென்றவர் இதுநாள் வரை திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Next Story