போதை மாத்திரை கும்பல் கைது !

போதை மாத்திரை கும்பல் கைது !
நாடு முழுவதும் போதை மாத்திரை விற்பனை செய்த மும்பை கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் போதை மாத்திரை விற்பனை செய்த மும்பை கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கோவை போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளது. கோவை கரும்புக்கடை மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நடந்த போதைப் பொருள் கைப்பற்றல் தொடர்பான விசாரணையில், இந்த கும்பலின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மும்பை தாராவியை சேர்ந்த நிகில் விகாஷ் (29) மற்றும் அஜய் குமார் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 340 போதை மாத்திரைகள், ஒரு டைரி மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு போதைப் பொருட்களை விநியோகித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், கேரளா, ஆந்திரா, காஷ்மீர் போன்ற பிற மாநிலங்களுக்கும் இந்த கும்பல் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளது. இந்த கும்பலின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 80 பேர் இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் இந்த 80 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
Next Story