விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரிக்கரையில் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

X
விழுப்புரம் 3வது வார்டு சித்தேரிக்கரை கிருஷ்ணா நகர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. வீடுகளுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி சேரும் சகதியுமாகி, குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்களும், பள்ளி மாணவர்களும் செல்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

