ஜோலார்பேட்டை அருகே மது போதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! இருசக்கர வாகனத்தில் விழுந்து உயிரிழந்ததாக நாடகம்!*
Tirupathur King 24x7 |18 Dec 2024 5:23 AM GMT
ஜோலார்பேட்டை அருகே மது போதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! இருசக்கர வாகனத்தில் விழுந்து உயிரிழந்ததாக நாடகம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மது போதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! இருசக்கர வாகனத்தில் விழுந்து உயிரிழந்ததாக நாடகம்!* திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார் இவர் தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவியான மணிமேகலை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திரும்பவும் அதேபோல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மணிமேகலை தனது மகனான சாரங்கபாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார் அப்போது சாரங்கபாண்டியும் குடித்திருந்த காரணத்தால் தந்தை மகன் இருவருக்கும் இடையே கைகலப்பு முற்றியதாக தெரிகிறது அப்போது சாரங்கபாண்டி தனது தந்தையை கட்டையால் பலமாக தலையில் தாக்கியதில் மயக்கம் அடைந்த கீழே விழுந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் தர்மபுரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் ரவிக்குமாரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர் அப்போது வரும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசி புதைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர் எனவே விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சாரங்கபாண்டியை ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் தந்தை மற்றும் மகன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக நாடகம் ஆடியது இந்த சம்பவத்தில் நிகிழ்ந்தேறியுள்ளது.
Next Story