உயிர் மூச்சு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு விழா!
Thoothukudi King 24x7 |18 Dec 2024 5:54 AM GMT
தூத்துக்குடியில், ஜோரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கத்தில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த "உயிர் மூச்சு" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது.
தூத்துக்குடியில், ஜோரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கத்தில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த "உயிர் மூச்சு" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகை தீபா தனக்கே உரித்தான எதார்தமான குழந்தை பேச்சு தன்மையுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை காமெடியாக நடித்து வந்து டெலிபோன் ராஜ் இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். மீசை ராஜேந்திரனின் பங்கு இந்த திரைப்படத்தில் அதிகமாகும். கிங்காங் எழுதிய காமெடிகள் இந்த திரைப்படத்தில் காட்சியாகக்கப்பட்டுள்ளது. நடிகர் பெஞ்சமின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இதுபோக சிவசு, சுமங்கலி சதீஷ், செங்குட்டுவன், ராஜகுமாரி, லலிதா, ராமசாமி மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஹானா, கதாநாயாகியவும் விக்னேஷ் கதாநாயகனாகவும் மிகவும் சிறப்பாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் அத்திமரப்பட்டி ஜோதிமணி கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் அரசியல் சதுரங்கம், விதி எண் 3, கருப்பு பக்கம், கிராக்கி ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிராட்வே சுந்தர் இந்த திரைப்படத்தை ஒரு வித்தியாசமாகவும், மிகவும் நேர்தியாகவும் இயக்கியுள்ளார். நடிகை தீபா கலந்து கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு விழா நடிகர் மீசை ராஜேந்திரன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.
Next Story