வீடு வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவர் கைது!
Thoothukudi King 24x7 |18 Dec 2024 6:10 AM GMT
வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை கைது செய்தனர்.
நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். இதில், நெல்லை தச்சநல்லூர் பெருமாள் வடக்கு தெருவைச் சேர்ந்த தாணப்பன் (52) என்பவர் பல்வேறு இடங்களில் பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் சென்றது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். தாணப்பன், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நெல்லையில் பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story