ராமநாதபுரம் அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |18 Dec 2024 7:37 AM GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க துணைத் தலைவர் காரிச்சாமி தலைமை வகித் தார். கோட்டச்செயலாளர் சேகர் பொருளாளர் சுப்பிர மணியன், முன்னிலைவகித் தனர். முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில் ஜி.டி.எஸ் ஊழியர்களை இலக்கு என்ற பெயரில் தினந்தோறும் பணிச்சுமை மன உளைச்சல் ஏற்படுத்தும் போக்கை கைவிட வேண்டும் ஜிடிஎஸ் ஊழியர்களின் சொந்த அலைபேசியில் பயிற்சி மேற்கொள்வதாக நிறுத்தப்பட்டு இலாகாவால் கொடுக்கப்பட்ட அலைபேசி யில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஏராளமான. கிராமிய அஞ் சல் ஊழியர்கள் கலந்துகொண்டு பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் சங்க பொருளாளர் சுப்பிரமணியன் நிறைவில் நன்றி கூறினார்
Next Story