அரசு மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா்
Chengalpattu King 24x7 |18 Dec 2024 9:44 AM GMT
அரசு மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா்
செங்கல்பட்டு அடுத்துள்ள பரனூா் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆட்சியா் ச. அருண் ராஜ் தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம் பரனூா் அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ளோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முகாமில் ஆட்சியா் ச.அருண்ராஜ் மறுவாழ்வு இல்லவாசிகளுக்கு ஆடைகளை வழங்கினாா். தொழுநோய் ஒழிப்பு திட்ட துணை இயக்குநா் கனிமொழி, மாற்றுத்திறனாளி அலுவலா் கதிா்வேலு, மறுவாழ்வு இல்ல நிா்வாக அலுவலா் பூபாலன், மருத்துவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்..
Next Story